மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு பெற்றது.

Update: 2022-05-31 10:18 GMT

புதுடெல்லி,

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நேற்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதேபோன்று காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரமும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. திமுக சார்பில் 3 பேர், அதிமுக சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் போட்டியின்றி தேர்வாகின்றனர். சுயேச்சை 7 பேரை முன்மொழிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் பரிசீலனையின் போது நிராகரிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்