எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முழுமையாக நடைபெறும்- கர்நாடக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முழுமையாக நடைபெறும் என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.;
பெங்களூரு: கர்நாடக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை முழுமையாக நடத்த பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் இல்லாமல் வகுப்புகள் முழுமையாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள், கொரோனாவுக்கு முன்பாக கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது போன்று, முழுமையாக பொது நுழைவு தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டங்கள் எதுவும் குறைக்கப்படாது. மாணவ, மாணவிகளின் வருகை பதிவு 75 சதவீதம் கண்டிப்பாக இருக்க வேண்டும். பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் எளிமையாக தயார் செய்யப்படாது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும், காலதாமதம் ஆகாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.