ஆன்மிகம் தான் இந்தியாவின் ஆன்மா- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
ஆன்மிகம் தான் இந்தியாவின் ஆன்மா என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
நாக்பூர்,
இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் கஷ்டத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே அவர்களுக்கு உதவியது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் பேசியதாவது:
ஆன்மிகம் தான் இந்தியாவின் ஆன்மா. இந்தியா தனது சொந்த உதாரணத்தின் மூலம் ஆன்மிகத்தின் அடிப்படையில் மக்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் சொல்லி தர வேண்டும். அகந்தை இல்லாத வாழ்க்கை வாழ்வதே இந்தியாவின் ஆன்மா.
இலங்கை பிரச்சனையில் இருந்த போது அவர்களுக்கு யார் உதவி செய்தது? இந்தியா மட்டுமே தான் உதவி செய்தது. மாலத்தீவு தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்ட போது அந்த நாட்டுக்கு தண்ணீரை அனுப்பியது இந்தியா தான். இது தான் ஆன்மீக இந்தியா" என்றார்.