மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார்.;

Update:2024-12-02 14:49 IST

புதுடெல்லி,

தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நிதி மந்திரி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்சினை, ஜி.எஸ்.டி., வரி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்