மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பெயர் தேர்வு என தகவல்

பரபரப்பான சூழலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெற உள்ளது.

Update: 2024-12-02 08:15 GMT

FILEPIC

மும்பை,

பரபரப்பான சூழலில் மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 23-ந் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜனதா 132 தொகுதிகளிலும், சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அதிகாரத்தை பகிர்வதில் இழுபறி ஏற்பட்டதால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னவிஸ் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று அல்லது நாளைக்குள் முறைப்படி அவர் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில், மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று அல்லது 3 ஆம் தேதிகளில் நடைபெறும் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறையைப் போன்றே 2 துணை முதல்-மந்திரிகள் நியமனம் இருக்கும் என்றும், ஒருவர் சிவ சேனா கட்சியையும், மற்றொருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் சார்ந்தவராக இருப்பார் என கூறப்படுகிறது 

Tags:    

மேலும் செய்திகள்