வாய் பேச முடியாத பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது

ராஜஸ்தானில் வாய் பேச முடியாத பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-12-11 14:07 GMT

கோப்புப்படம் 

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் கடந்த மாதம் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணை கும்பல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுனில் விஷ்னோய் (21) மற்றும் பஜன் லால் பிஷ்னோய் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பார்மர் காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவா தெரிவித்தார்.

நவம்பர் 24 அன்று, மாவட்டத்தில் ஆடு மேய்க்கச் சென்ற 20 வயது பெண் அடையாளம் தெரியாத நான்கைந்து நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த பெண்ணால் பேசவோ, கேட்கவோ முடியாத காரணத்தாலும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாததால், அடையாளம் தெரியாத குற்றவாளியின் பெயரைக் கூறுவது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாக எஸ்பி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்