நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு, இந்தியா - அமித்ஷா பெருமிதம்

நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு, இந்தியா என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-08-23 21:13 GMT

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சந்திரயான்-3 திட்ட வெற்றியின் மூலம், நிலவின் தென்துருவத்தை தொட்ட முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. விண்வெளி திட்டங்களுக்கான உலகின் ஏவுதளமாகவும் இந்தியா உயர்ந்துள்ளது. இந்த வெற்றி, இந்திய நிறுவனங்களுக்கு விண்வெளிக்கான நுைழவாயிலை திறப்பதுடன், நமது இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். விஞ்ஞானிகளுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்