மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டி உடுப்பியில் சிறப்பு யாகம்

மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டி உடுப்பியில் சிறப்பு யாகம் நடந்தது.;

Update: 2023-07-31 18:45 GMT

மங்களூரு-

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக மோடி செயல்பட்டு வருகிறார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று முதல் முறையாக மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி 2-வது முறையாக பிரதமரானார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா கூட்டணியும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டி உடுப்பி மாவட்டம் காபு அருகே உள்ள படபெட்டு சுப்பிரமணியசாமி கோவில் அடிவாரத்தில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் அர்ச்சகர்கள் கலந்துகொண்டு மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு ஹோமங்களும் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்