தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாகவே கேரளாவில் தொடங்கியது - இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாக கேரளாவில் இன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
Southwest Monsoon Reaches Kerala, 3 Days Ahead Of Schedule
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாகவே தொடங்கியது - இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாக இன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Kerala, southwest monsoon, Indian Meteorological Department, கேரளா, தென்மேற்கு பருவமழை, இந்திய வானிலை ஆய்வு,
திருவனந்தபுரம்,
தென்மேற்கு பருவமழை அதன் இயல்பான தொடக்கத் தேதியான ஜூன் 1-ஆம் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக கேரளாவில் கேரளாவில் இன்று தொடங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்தியாவின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தின் உயிர்நாடியாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது. அதாவது மே 23-ந்தேதியே மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியும் தென்பட தொடங்கியது.
அதன் பின்னர் வானிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் தென்படாததால், 30-ந்தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை மூன்று நாட்கள் முன்னதாக கேரளாவில் இன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் வருகிற 1-ம்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.