அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Update: 2024-05-19 07:46 GMT

புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்று ஏற்கனவே கணிப்புகள் வெளிவந்தன. இதையடுத்து 19-ந்தேதி (அதாவது இன்று), தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

அதைபோல தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்