ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி: தென்கிழக்கு ரெயில்வேயின் பொது மேலாளர் நீக்கம்

தென்கிழக்கு ரெயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-07-01 00:54 GMT

புதுடெல்லி,

ஒடிசாவின் பாலாசோரில் ஜூன் 2ஆம் தேதி, சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 291 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த பயங்கர விபத்துக்குப் பிறகு, தென்கிழக்கு ரெயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

"தென்கிழக்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக அனில் குமார் மிஸ்ராவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்