விரைவில் 15 ஆயிரம் போலீஸ்காரர்கள் நியமனம்; மந்திரி பரமேஸ்வர் பேட்டி

விரைவில் 15 ஆயிரம் போலீஸ்காரர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என மந்திரி பரமேஸ்வர் பேட்டி.

Update: 2023-06-04 21:24 GMT

பெங்களூரு:

துமகூருவில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மாநிலத்தில் போலீஸ் துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக 15 ஆயிரம் போலீஸ்காரர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் புதிதாக 15 ஆயிரம் போலீஸ்காரர்கள் நியமிக்கப்படுவார்கள். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் 53 பேர் தவறு செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக மறுத்தேர்வு நடத்துவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக மறுத்தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்வது அரசின் கடமையாகும். இதுபற்றி விரிவாக ஆலோசித்து கூடிய விரைவில் சரியான முடிவை அரசு எடுக்கும். காங்கிரஸ் அளித்துள்ள 5 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இலவச திட்டங்கள் 5 ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்