காங்கிரஸ் காரிய கமிட்டியில் புதிதாக 2 பேர் சேர்ப்பு சோனியாகாந்தி அறிவிப்பு
காங்கிரஸ் காரிய கமிட்டியில் அரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமாரி செல்ஜா, மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
காங்கிரஸ் காரிய கமிட்டியில் அரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமாரி செல்ஜா, மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறப்பித்துள்ளார்.
மேலும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி. டி.சுப்பராம ரெட்டியை காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளராகவும், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஜய்குமார் லல்லுவை சிறப்பு அழைப்பாளராகவும் சோனியாகாந்தி நியமித்துள்ளார்.