'ஆட்சி செய்ய பிறந்தவர்கள் என நினைக்கிறார்கள்" உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக சாடிய ஏக்நாத் ஷிண்டே

உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான எனது முடிவு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-10 15:37 GMT

மும்பை,

சிவசேனா தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான உத்தவ் தாக்கரேவை கடுமையாக சாடிய மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, "சிலர் ஆட்சி செய்வதற்காகவே பிறந்து இருப்பதாக தங்களை நினைத்துக்கொள்கிறார்கள்" என்று விமர்சித்தார். மேலும், ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், " உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான எனது முடிவு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அனைவருக்குமான வளர்ச்சியை எனது இந்துத்வா அரசு உறுதி செய்யும். நான் பிறவி செல்வந்தன் கிடையாது.

நான் உங்களில் ஒருவன். ஆள்வதற்காகவே நாம் பிறந்து இருக்கிறோம் என சிலர் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு சாதாரண நபர் முதல் மந்திரியாக பொறுப்பேற்று இருப்பதை கண்டு அவர்கள் பெருமைப்பட வேண்டும். ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை எங்களுக்கு உள்ளது. சட்ட விரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்