டெல்லியில் கடும் பனி மூட்டம்: ரெயில்,விமான சேவை பாதிப்பு
கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லியில் ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டது.
புதுடெல்லி,
வடமாநிலங்களில் நிலவும் பனி மூட்டம் மற்றும் குளிர் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால், கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவிகிறது.
காலை 8 மணி வரை அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால்,ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. விளக்குகளை எரியவிட்டபடி சென்றாலும், ரயிகளை இயக்குவதில் சிரமம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதேபோன்று பனி மூட்டத்தால், டெல்லி விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமானங்களும் தாமதமாக வந்திறங்கின. பல்வேறு நகரங்களிலிருந்து சுமார் 60 விமானங்கள் டெல்லிக்கு தாமதமாக வந்திறங்கின.
22 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால், விமான நிலையத்தில் பயணிகள் அவதி அடைந்தனர்.