போதைப்பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் கைது

போதைப்பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-10-11 18:45 GMT

பெங்களூரு: பெங்களூரு பானசவாடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நைஜீரியாவை சேர்ந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது பெயர் கிங் (வயது 44) என்பதும், சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து, போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.5½ லட்சம் மதிப்பலான போதைப்பொருட்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்