நிதிப் பிரச்சினை: 600 ஊழியர்களை நீக்கிய கார்ஸ்24 நிறுவனம்

சாஃப்ட்பேங்க் மற்றும் ஆல்பா வேவ் குளோபல் ஆதரவு பெற்ற கார்ஸ்24 நிறுவனம் நிதிப் பிரச்சினை காரணமாக 600 ஊழியர்களை பணியைவிட்டு நீக்கியது.;

Update:2022-05-19 16:50 IST

புதுடெல்லி

2015ஆம் ஆண்டு கார்ஸ்24 நிறுவனம் தொடங்கப்பட்டது. பழைய கார்கள் வாங்குவதையும் விற்பனை செய்வதையும் எளிமைப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்த நிறுவனம். ஒரே ஒரு அலுவலகத்துடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நாடு முழுவதும் 182 முக்கிய நகரங்களில் 205 கிளைகளை நிறுவியது.

4 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கும் சேவையை வழங்கியது. சமீப காலமாக, முதலீட்டார்களின் முதலீடு குறைந்து வருவதால் நிதியை தக்க வைக்க பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவந்த 600 ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது கார்ஸ்24 நிறுவனம். யூஎன்அகாடெமி, வேதாந்து, மீஷோ ஆகிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை இதே காரணத்துக்காக பணியை விட்டு நிறுத்தினர். அந்த வரிசையில் கார்ஸ்24 நிறுவனமும் இணைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்