மெட்ரோ பணிகளின்போது இதுவரை 30 பேர் உயிரிழப்பு

மெட்ரோ பணிகளின் போது இதுவரை 30 பேர் உயிரிழந்திருப்பதாக தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

Update: 2023-06-11 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் மெட்ரோ வழித்தடங்களை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தினமும் 5 லட்சம் பேர் வரை இந்த மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். எனினும் மெட்ரோ கட்டுமான பணிகளின்போது சில உயிரிழப்புகள் நடந்து உள்ளன. பெங்களூருவில் மெட்ரோ சேவை தொடங்கிய நாள் முதல் இதுவரை மொத்தம் மெட்ரோ தொடர்பான விபத்துகளில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில், 'பெங்களூருவில் கடந்த 2007-ம் ஆண்டு மெட்ரோ பணிகள் தொடங்கியது.

தற்போது கெங்கேரி-ஒயிட்பீல்டு உள்பட பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த சேவையை விரிவுப்படுத்தும் நடவடிக்கையை மெட்ரோ நிர்வாகமும், அரசும் மேற்கொண்டு வருகிறது. எனினும் கட்டுமான பணிகளின்போது சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெட்ரோ தூண் சரிந்து விழுந்து தாய்-குழந்தை உயிரிழந்ததும் அடங்கும். இந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக 3 என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக காண்டிராக்டர்களிடம் இருந்து ரூ.3¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு, அந்த தொகை பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்