விருந்து நிகழ்ச்சியில் பாம்பு விஷம்; பிக் பாஸ் வெற்றியாளரிடம் விசாரணை

நொய்டா மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் விருந்து நிகழ்ச்சிகளில் வீடியோ எடுத்து வருகிறார் என விலங்குகள் நல அமைப்பு புகாரில் தெரிவித்து உள்ளது.

Update: 2023-11-06 02:57 GMT

கோட்டா,

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோட்டா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கார் ஒன்றை தடுத்து நிறுத்தி, சோதனையிட்டபோது, அதில் பாம்பு விஷம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதவிர, 5 நாக பாம்புகள் உள்ளிட்ட 9 பாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதில், பிக் பாஸ் ஓ.டி.டி. வெற்றியாளர் மற்றும் பிரபல யூ-டியூபரான எல்விஷ் யாதவ் (வயது 26), நொய்டா நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு பாம்புகள் மற்றும் பாம்பு விஷம் ஆகியவற்றை சப்ளை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோட்டா நகரில் எல்விஷ் கைது செய்யப்பட்டார்.

அதற்கு முன் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன் அவை போலியானவை. அதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என குறிப்பிட்டார்.

எனினும், கைது செய்யப்பட்ட அவரை விசாரணைக்கு பின்னர் நொய்டா போலீசார் விடுவித்துள்ளனர்.

சட்டவிரோத வகையில் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில், எல்விஷ் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு, பாம்புகள் மற்றும் பாம்பு விஷம் ஆகியவற்றுடன் வீடியோக்களை எடுத்து வருகிறார். நொய்டா மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் விருந்து நிகழ்ச்சிகளில் வீடியோ எடுத்து வருகிறார் என விலங்குகள் நல அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், வனவாழ் உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழும் எல்விஷுக்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கானது, ரிசர்வ் போலீஸ் லைனுக்கு மாற்றப்பட்டு உள்ளது என நொய்டா போலீஸ் காவல் ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்