இந்தியா-சீனா போரின்போது தயாரிக்கப்பட்ட புகை குண்டு அசாமில் கண்டெடுப்பு

இந்தியா-சீனா போரின்போது தயாரிக்கப்பட்ட புகை குண்டு அசாமில் கண்டெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது.;

Update: 2024-09-01 03:25 GMT

திஸ்பூர்,

கடந்த 1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-சீனா போரின்போது தயாரிக்கப்பட்ட ஒரு புகை குண்டு, அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேக்கியாஜுலி என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள சேசா ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் இந்த புகை குண்டை கண்டெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் எதிரிகளின் பார்வையில் இருந்து தப்புவதற்காக ஒரு புகைத் தடுப்பை ஏற்படுத்த புகைகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த புகை குண்டு குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் அதனை கைப்பற்றி கொண்டு சென்றனர். பின்னர் ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் புகை குண்டு பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்