சகோதரி மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
சகோதரி மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா அருகே வசித்து வருபவர் மூர்த்தி (வயது 45). இவரது சகோதரி லட்சுமியம்மா. இவரது மகளுக்கு திருமணமாகி விட்டது. கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில், லட்சுமியம்மாவின் மகளை சில வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மூர்த்தியின் கவனத்திற்கு வந்தது. உடனே அவர், அந்த வாலிபர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள், மூர்த்தியை ஆயுதங்களாலும், பாட்டிலாலும் கொடூரமாக தாக்கினார்கள். இதில், பலத்தகாயம் அடைந்த அவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடிவருகிறார்கள்.