சித்து மூஸ்வாலா கொலை வழக்கு; லாரன்ஸ் பிஸ்னோயின் கூட்டாளிகள் 13 பேர் கைது

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்;

Update: 2022-07-14 10:32 GMT

சித்து மூஸ்வாலா

புதுடெல்லி,

பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. பிரபல பஞ்சாபி மொழி பாடகரான இவர், சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியின் முன்னணி தலைவராக செயல்பட்டு வந்த இவர் சட்டசபை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

ஆம் ஆத்மி அரசு அமைந்ததும், மூஸ்வாலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. இதற்கு அடுத்த சில தினங்களில் அதாவது கடந்த மே 29 ஆம் தேதி மூஸ்வாலா தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது. பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்பட 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்