வடமாநிலங்களில் 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை - சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் விசாரணை நடத்தவில்லை என தகவல்

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று வட இந்தியா முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தியது.;

Update: 2022-09-12 12:15 GMT

புதுடெல்லி,

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று வட இந்தியா முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தியது.

பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்குக்கும் இந்த விசாரணைக்கும் தொடர்பில்லை என்று என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது. பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அளித்த அதிகாரிகள், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலையிலும் இந்த கும்பல்களில் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர். பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் அரியானாவில் உள்ள கோல்டி ப்ரார் மற்றும் ஜக்கு பகவான்பூரியா ஆகியோரின் வீடுகள் உட்பட பிற இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் முசேவாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு கும்பல், பின்னர் அந்த பணத்தை பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்