பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்கு தொடர்புடைய 3 பேர் கைது..!

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்கு தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-06-20 14:02 GMT

image courtesy: instagram via ANI

புதுடெல்லி,

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில் சித்து மூஸ் வாலா கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கையெறி குண்டுகள், 9 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 3 கைத்துப்பாக்கிகள், ஒரு தாக்குதல் துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியைச் சேர்ந்த துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் உட்பட 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்த பிரியவ்ரத் என்ற ஃபவுஜி (26), ஜாஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த காஷிஷ் (24), மற்றும் பஞ்சாப்பின் பதிண்டாவைச் சேர்ந்த கேசவ் குமார் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்