14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்த சித்தராமையா; கர்நாடக சட்டசபை வரலாற்றில் சாதனை

கர்நாடக சட்டசபை வரலாற்றில் 14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்து சித்தராமையா சாதனை படைத்தார்.;

Update: 2023-07-07 18:45 GMT

கர்நாடக முதல்-மந்திரியாக 2-வது முறையாக சித்தராமையா பதவி ஏற்றுள்ளார். நிதித்துறையை தன் வசம் வைத்துள்ள சித்தராமையா நேற்று 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 14-வது பட்ஜெட் ஆகும். ஏற்கனவே துணை முதல்-மந்திரியாக இருந்த போது 7 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர் காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் 2005-07 வரை துணை முதல்-மந்திரியாக இருந்த போதும், 1995-ம் ஆண்டு 2000-ம் ஆண்டு வரையிலான ஜனதாதளம் (எஸ்) ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக இருந்த போதும், 1997, 1998, 1999-ம் ஆண்டுகளில் எச்.டி.தேவேகவுடா முதல்-மந்திரியாக இருந்த சமயத்திலும் துணை முதல்-மந்திரியாகவும் சித்தராமையா கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதன் முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு பட்ஜெட் தாக்கல் செய்தார். 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 6 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது அவர் 14-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். கர்நாடக சட்டசபை வரலாற்றில் 14 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமை அவரையே சாரும்.

சித்தராமையா தற்போது மாநிலத்தின் 24-வது முதல்-மந்திரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்