முதல்-மந்திரி சித்தராமையா கலெக்டர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை

முதல்-மந்திரி சித்தராமையா மாவட்ட கலெக்டர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-09-13 21:38 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி சித்தராமையா மாவட்ட கலெக்டர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.

மின் கம்பங்கள்

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கலெக்டர்கள் மாநாடு நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இந்த மாநாடு நேற்று 2-வது நாளாக சித்தராமையா தலைமையில் விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

மின் வினியோக நிறுவனங்கள் புதிய மின் இணைப்பு வழங்க அதிக காலம் எடுத்துக்கொள்ள கூடாது. மின்மாற்றி, மின் கம்பங்கள் இல்லை என்று சொல்லக்கூடாது. பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் மின் கம்பங்களை அமைக்க வேண்டும். கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கவும், அவற்றுக்கு மின் இணைப்பு வழங்கவும் தாமதப்படுத்தக்கூடாது. பணிகளை தாமதப்படுத்துவது தவறு.

எத்தனை விண்ணப்பங்கள்

துணை மின்நிலையங்கள் அமைப்பது, மின்மாற்றி அமைப்பதற்கான நிலத்தை வழங்குவது தொடர்பான எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன?. விண்ணப்பங்களை வாங்கி வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள்?. இவற்றின் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் குறைந்துள்ளது. இதை சரிசெய்ய வேண்டும். சொத்து, வணிக வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீசு வழங்கி நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்