எங்கு போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்பதை, நன்கு அறிந்தவர் சித்தராமையா-மந்திரி கே.சுதாகர் சொல்கிறார்
எங்கு போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்பதை, நன்கு அறிந்தவர் சித்தராமையா என்று மந்திரி கே.சுதாகர் சொல்கிறார்
கோலார் தங்கவயல்: கோலாரில் இன்று மந்திரி கே.சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-அரசியலில் சித்தராமையாவுக்கு 40 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்த பின்னர் அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் யார், யார் என்பதை அவரே நன்கு உணர்ந்துள்ளார். எங்கு போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்பதை சித்தராமையா நன்கு அறிந்தவர். முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் போன்றவர்கள் அழைத்தால் உடனே கோலார் தொகுதியில் போட்டியிட சித்தராமையா சம்மதம் தெரிவிக்க மாட்டார். ரமேஷ்குமார் பற்றி சித்தராமையாவுக்கு நன்கு தெரியம். ரமேஷ்குமாரும், சீனிவாசகவுடாவும் சித்தராமையாவை போல் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்தவர்கள். அப்படியிருக்க சித்தராமையா மட்டும் முதல் மந்திரியாகி விட்டார்.
தான் ஏன் முதல்-மந்திரியாக ஆக்கக்கூடாது என்பதற்காக சீனிவாச கவுடாவை வைத்து ரமேஷ்குமார், சித்தராமையாவை தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.