உப்பள்ளி தர்கா இடிப்புக்கு சித்தராமையா கண்டனம்

உப்பள்ளி தர்கா இடிப்புக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-01-02 21:13 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் இன்று (நேற்று) உப்பள்ளி பைரிதேவரகொப்பா தர்காவுக்கு வந்தேன். அங்கு தர்காவை இடிக்க வேண்டாம் என்று முதல்-மந்திரியிடம் கூறினேன். அவர், தர்காவை இடிப்பது இல்லை என்று கூறினார். ஆனால் இரவோடு இரவாக அந்த தர்காவை இடித்து தள்ளினர். நான் பேசிய பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. இது முஸ்லிம் சமூகம் மீது பா.ஜனதா நடத்திய தாக்குதல் ஆகும்.

அந்த கட்சியின் நோக்கமே விரோத அரசியலை செய்ய வேண்டும் என்பது தான். இந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினருடன் கலந்து ஆலோசிக்காமல் தர்காவை இடித்ததை கண்டிக்கிறேன். அந்த தர்காவை இடத்தால் மதக்கலவரம் நடைபெறும் என்று பா.ஜனதாவினர் நினைத்தனர். ஆனால் அவ்வாறு எந்த கலவரமும் நடக்கவில்லை. இந்த தர்கா இடிக்கப்பட்டதற்கு மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியே நேரடி காரணம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்