எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கூடுதல் டி.ஜி.பி.க்கு உண்மை கண்டறியும் சோதனை- சித்தராமையா வலியுறுத்தல்

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கூடுதல் டி.ஜி.பி.க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தகோரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-07-14 16:34 GMT

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:- சப்-இன்ஸ்பெக்டர்(எஸ்.ஐ.) நியமன தேர்வு முறைகேட்டில் பல்வேறு மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு நெருங்கியவர்கள் ஈடுபட்டு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி முழுமையான தகவல் கிடைக்க வேண்டும் என்றால், கைது செய்யப்பட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அவ்வாறு சோதனை நடத்தினால் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது பற்றி தகவல் தெரியவரும். மேலும் அம்ருத் பால் எழுதி வைத்துள்ள பதிவேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். அதாவது தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்