அடிப்படை வசதிகள் நடைபெறுவதற்கு பெங்களூருவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வர வேண்டுமா?- பி.டி.ஏ.வுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு கண்டனம்

அடிப்படை வசதிகள் நடைபெறுவதற்கு பெங்களூருவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வர வேண்டுமா? என்று பி.டி.ஏ.வுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி ேகட்டு கண்டனம் ெதரிவித்து உள்ளது.

Update: 2022-06-24 17:14 GMT

பெங்களூரு: அடிப்படை வசதிகள் நடைபெறுவதற்கு பெங்களூருவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வர வேண்டுமா? என்று பி.டி.ஏ.வுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி ேகட்டு கண்டனம் ெதரிவித்து உள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை

பெங்களூரு விஸ்வேசுவரய்யா லே-அவுட்டில் உள்ள வீடுகளுக்கு குடிநீர், சாக்கடை கால்வாய், சாலை அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ) செய்து கொடுக்காமல் இருந்தது. இதுபற்றி பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திடம், அந்த லே-அவுட்டில் வசிப்பவர்கள் பல முறை புகார் அளித்தும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு எதிராக, அந்த குடியிருப்பில் வசித்து வரும் மஞ்சுளா மற்றும் சாரதம்மா ஆகிய 2 பேரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி வீரப்பா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று  அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

ஜனாதிபதி, பிரதமர் வர வேண்டுமா?

அப்போது பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், விஸ்வேசுவரய்யா லே-அவுட்டில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட நீதிபதி வீரப்பா, பெங்களூருவுக்கு பிரதமர் வருகையையொட்டி ரூ.23 கோடியில் மாநகராட்சி சார்பில் சாலை அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பிரதமர் வருகையின் போது, அவர் செல்லும் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படுகிறது. பிரதமர் மெச்சுவதற்காக மட்டுமே சாலைகள் அதிகாரிகளால் சரி செய்யப்படுகிறது. பெங்களூருவில் சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெறுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் வருகைதர வேண்டுமா?. விஸ்வேசுவரய்யா லே-அவுட்டில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் விவகாரத்தில் பி.டி.ஏ.வும், பெங்களூரு குடிநீர் வளர்ச்சி வாரியமும் தோல்வி அடைந்து விட்டது. இன்னும் 2 வாரங்களுக்குள் அந்த லே-அவுட்டில் வசிக்கும் நபர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு நீதிபதி வீரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்