பிறந்த குழந்தைகளுக்கான எய்ட்ஸ் பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு..?

பிறந்த குழந்தைகளுக்கான எய்ட்ஸ் பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-12-01 17:22 GMT

புதுடெல்லி,

எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சி.டி-4 என்ற கருவியின் மூலம் எச்.ஐ.வி. தாக்கம் கண்டறியப்பட்டு அவற்றின் அளவிற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எய்ட்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் பிறந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் எச்ஐவி பரிசோதனை கருவிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டின் காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு இருப்பதோடு சில இடங்களில் பரிசோதனைகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

(EID) ஆரம்பகால குழந்தை நோய் பரிசோதனை கருவிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு விலக்கு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் காரணமாகவே, இந்த பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்