விளையாட்டு துறை மந்திரியை நோக்கி காலணி வீச்சு - ராஜஸ்தானில் பரபரப்பு

ராஜஸ்தானில் விளையாட்டுத்துறை மந்திரியை நோக்கி காலணி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-09-13 02:55 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் விளையாட்டுத்துறை மந்திரி அசோக் சந்த்னா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காலணி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஷ்கர் மேளா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் அசோக் சந்த்னா உரை நிகழ்த்த வந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அவரை நோக்கி காலணி மற்றும் பிற பொருட்களை வீசத் தொடங்கினர். மேலும், நிகழ்ச்சியில் அசோக் சந்த்னாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

Tags:    

மேலும் செய்திகள்