சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவின் சகோதரருக்கு பொதுச்செயலாளர் பதவி
சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவின் சகோதரருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
லக்னோ,
சமாஜ்வாடி கட்சியில் முன்னணி தலைவராக விளங்கி வந்த முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவபால் யாதவ், அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு கட்சியை விட்டு வெளியேறினார்.
பின்னர் புதிய கட்சியை தொடங்கிய அவர், முலாயமின் இறப்புக்குப்பின் மீண்டும் அகிலேசுடன் இணைந்தார். அத்துடன் தனது கட்சியையும் சமீபத்தில் சமாஜ்வாடியில் இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் 62 உறுப்பினர் தேசிய செயற்குழு உறுப்பினர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் நீடிக்கிறார். முலாயமின் சகோதரர் சிவபால் யாதவுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் சுவாமி பிரசாத் மவுரியா, கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் உள்பட 14 பேர் தேசிய பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.