பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அரசு டாக்டர் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-09-21 18:45 GMT

சிக்கமகளூரு-

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அரசு டாக்டர்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் டாக்டராக எல்போஸ் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் பாலேஹொன்னூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். அப்போது அதே ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுக்கு, எல்போஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் எல்போஸ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் தற்போது என்.ஆர்.புரா தாலுகா ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாலியல் தொல்லை

இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் 45 வயது பெண் ஒருவருக்கு, எல்போஸ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் என்னை சந்தோஷப்படுத்த தனது குடியிருப்புக்கு வா என எல்போஸ், அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் இதுகுறித்து கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் டாக்டரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

பணியிடை நீக்கம்

அதன்படி அந்த பெண்ணை டாக்டர்  குடியிருப்புக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு கணவர் மற்றும் உறவினர்கள் குடியிருப்புக்குள் புகுந்து எல்போசிற்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எல்போசை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவ அதிகாரிகள், மாவட்ட மருத்துவ அதிகாரி அஸ்வத் பிரபுவிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி டாக்டர் எல்போசை பணியிடை நீக்கம் செய்து அஸ்வித் பிரபு உத்தரவிட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்