தெலுங்கானாவில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மூத்த அதிகாரி பணியிடை நீக்கம்

விளையாட்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-08-13 22:54 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே உள்ள ஹக்கிம்பேட் நகரில் மாநில விளையாட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூத்த அதிகாரியாக இருக்கும் ஒருவர், மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதாக மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி ஸ்ரீனிவாஸ் கவுட் நேற்று அறிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் ஸ்ரீனிவாஸ் கவுட் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்