பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; மத்திய ஆயுதப்படை கமாண்டர் கைது

மத்திய ஆயுத போலீஸ் படையில் கமாண்டராக சுரிந்தர் சிங் ரானா என்பவர் இருந்து வருகிறார்.;

Update: 2022-10-24 21:45 GMT

ஜம்மு-காஷ்மீர், 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதாம்புரா மாவட்டத்தில் மத்திய ஆயுத போலீஸ் படையில் கமாண்டராக சுரிந்தர் சிங் ரானா என்பவர் இருந்து வருகிறார். அதே பிரிவில் உதவி கமாண்டராக பெண் ஒருவர் உள்ளார். இந்த நிலையில் பணியின்போது அந்த பெண்ணுக்கு, சுரிந்தர் சிங் ரானா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் உதாம்புரா போலீசில் கமாண்டர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கமாண்டர் சுரிந்தர் சிங் ரானாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜா்படுத்தினர். கமாண்டர் சார்பில் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில் கமாண்டர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்