வடமாநிலங்களில் தொடர் நிலநடுக்கம்: ஜம்மு காஷ்மீரில் 4.1 ஆக பதிவானது

வடமாநிலங்களில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன்படி ஜம்மு காஷ்மீரில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2023-06-17 23:28 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே யூனியன் பிரதேசம் கத்ரா பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

வடமாநிலங்களில் நேற்றிரவு முதல் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக லடாக்கின் லே மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்திருந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்