கேரளா: பாலியல் வன்கொடுமை வழக்கில் மூத்த அரசியல்வாதி பி.சி.ஜார்ஜ் கைது

பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள மூத்த அரசியல்வாதி பி.சி.ஜார்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-07-02 12:45 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் பூஞ்சார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் (வயது 70). இவர் தொடர்ந்து 33 ஆண்டுகளான அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. இருந்துள்ளார்.

இவர் மீது பெண் ஓருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.சோலார் பேனல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண் அளித்த புகாரில், கடந்த பிப்ரவரி 10-ந்தேதி தைக்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு தன்னை அழைத்தாகவும் ,அங்கு சென்ற தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், செல்போனில் அநாகரீகமான முறையில் குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், பி.சி.ஜார்ஜ்யை கன்டோன்மென்ட் போலீஸார் கைது செய்தனர்.அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்