நகர்ப்புறத் திட்டமிடல், மேம்பாடு உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கு - பிரதமர் மோடி இன்று உரை
நகர்ப்புறத் திட்டமிடல், மேம்பாடு உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
நகர்ப்புறத் திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மைக் குறித்த, பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கில், பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) உரையாற்ற உள்ளார்.
மத்திய வீட்டுவசதி துறை, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதில், நகர்ப்புறத் திட்டமிடல் வல்லுநர்கள், நிதி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளனர்.