அரசு பஸ்சில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்
பங்காருபேட்டையில் அரசு பஸ்சில் கடத்திய 4 கிலோ கஞ்சாவை போலீசாா் பறிமுதல் செய்தனா். இதுசம்பந்தமாக பீகார் வாலிபரை கைது செய்துள்ளனர்.;
பங்காருபேட்டை
கோலார் மாவட்டம் பங்காருபேட்ைட டவுனில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கலால் துறை அதிகாரிகள், பங்காருபேட்டை போலீசார் உதவியுடன் அரசு பஸ் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது அரசு பஸ்சில் இருந்து வந்திறங்கிய ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் பீகாரை சேர்ந்த இர்ஷாத் (வயது 25) என்பதும், அரசு பஸ்சில் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
தையடுத்து இர்ஷாத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 கிலோ 285 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.