ஸ்ரீநகரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அமித்ஷா தெரிவித்தார்.;

Update: 2023-06-23 16:48 GMT

Image Courtesy : ANI

ஸ்ரீநகர்,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற 'விடஸ்டா' கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித்ஷா, ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்