டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு
இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அடுத்தடுத்து கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து வருகிறது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அடுத்தடுத்து கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சி நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.