மணிப்பூரில் ஜூலை 8-ந்தேதி வரை பள்ளிகள் மூடப்படும் - மாநில அரசு அறிவிப்பு
மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளின் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.;
இம்பால்,
மணிப்பூரில், கடந்த மாதம் 3-ந்தேதி, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந்தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜூலை 5-ந்தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்ட்டுள்ளது.
மேலும் கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் மணிப்பூர் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மணிப்பூரில் பள்ளிகள் வரும் ஜூலை 8-ந்தேதி வரை மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளின் திறப்பு தள்ளிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.