கர்நாடகாவில் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஆசிரியர் கைது
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.;
பெங்களூரு,
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் பள்ளி ஒன்றில் 33 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கோலார் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், கடந்த ஆறு மாதங்களாக சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை சிறுமி எதிர்த்தபோது, யாரிடமாவது சொன்னால் தேர்வில் மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் மிரட்டியுள்ளார்.
ஆசிரியரின் கொடூர செயலை, பாதிக்கப்பட்ட சிறுமி தனது தோழியிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தோழி, தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
தொடர்ந்து, இதுபற்றி தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் கவுனிப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் பள்ளியில் உள்ள மற்ற சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.