1-ம் வகுப்பில் சேர குழந்தைகளுக்கு வயது வரம்பு உயர்வு

கர்நாடகத்தில் 1-ம் வகுப்பில் சேர குழந்தைகளுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.

Update: 2022-11-15 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் மகாந்தய்யா ஒசமட் பிறப்பித்துள்ள புதிய உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் பள்ளிகளில் அதாவது 1-ம் வகுப்பில் சேருவதற்கான வயது வரம்பு 6 ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது வருகிற 2025-26-ம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் 1-ந் தேதியுடன் குழந்தைகளுக்கு 6 வயது நிரம்பி இருந்தால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தற்போது பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேருவதற்கான வயது வரம்பு 5½ ஆக உள்ளது.

இந்த வயது வரம்பு தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட ஆண்டில் ஒருவேளை குழந்தைகள் 6 வயதை அடைய 1 மாதம் குறைவாக இருந்தாலும் அத்தகைய குழந்தைகள் 1-ம் வகுப்பில் சேர முடியாத நிலை ஏற்படும். அந்த குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கை பெற ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்