பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

Update: 2023-01-11 20:17 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பீகாரில் நடைபெற்றுவரும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிராக அந்த மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அகிலேஷ்குமார் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பீகாரில் நடைபெறும் சாதி வாரி கணக்கெடுப்பு சமத்துவ உரிமைக்கும், அரசமைப்பு சட்டத்துக்கும் எதிராக உள்ளதால் அதை அனுமதிக்க கூடாது. சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, பீகாரில் நடைபெற்றுவரும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு வெள்ளிக்கிழமை (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்