உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு - விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு தொடர்பான விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.
புதுடெல்லி,
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் உத்தரபிரதேசத்தில் பழிவாங்கும் நோக்கில் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் ஜமாஅத்-உலேமா-ஐ ஹிந்த் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, மனுதாரர் அன்பழகன் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு நாளை (இன்று) விசாரிக்கிறது.
எனவே இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பான விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.