சோனியா காந்தி தலைமைக்கு எதிராக கேள்வி எழுப்பிய சசி தரூர் காங்கிரஸ் காரிய கமிட்டியில் சேர்ப்பு

கட்சியில் உயரிய முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியில் சச்சின் பைலட், சசி தரூர் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Update: 2023-08-20 12:13 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த கமிட்டியில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, சச்சின் பைலட் மற்றும் சசி தரூர் எம்.பி. ஆகியோர் கமிட்டியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி தலைமைக்கு எதிராக கேள்வி எழுப்பிய ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 23 தலைவர்கள் கொண்ட குழுவில் ஒருவராக இருந்தவர் சசி தரூர்.

காங்கிரஸ் கட்சியில் உயரிய முடிவு எடுக்கும் மற்றும் அதனை அமல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த கமிட்டி உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டியில் ஓர் உறுப்பினராக சசி தரூர் சேர்க்கப்பட்டு உள்ளார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்