சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம்: யோகி ஆதித்யநாத் பேச்சு

ராமர் கோவிலை போன்று சேதப்படுத்தப்பட்ட மத தலங்களை மீட்டெடுக்க பிரசாரம் மேற்கொள்ளும்படி மக்களுக்கு உத்தர பிரேதச முதல்-மந்திரி அழைப்பு விடுத்து உள்ளார்.

Update: 2023-01-28 04:19 GMT



லக்னோ,


ராஜஸ்தானில் பின்மல் நகரில் சேதமடைந்து இருந்த நீல்கந்த மகாதேவ கோவிலை மீட்டெடுத்து, புனரமைத்த பின்னர் நடந்த குடமுழுக்கு திருவிழாவில் உத்தர பிரேதச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

இதேபோன்று, மத்திய நீர்மின் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருவரும் ருத்ராட்ச மரக்கன்றை நட்டனர்.

இதன்பின்பு, நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசும்போது, இந்தியாவில் சனாதன தர்மம் தேச மதம் ஆக உள்ளது. அதனை ஒவ்வொரு குடிமகனும் மதிக்க வேண்டும் என கூறினார்.

அதன்பின்பு அவர், பிரதமர் மோடியின் முயற்சியால் 500 ஆண்டுகளுக்கு பின்னர் அயோத்தியாவில் ராமர் கோவிலை மீட்டெடுத்து, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இதே வரிசையில் நாட்டில் உள்ள சேதப்படுத்தப்பட்டு கிடக்கும் மத தலங்களை மீட்டெடுப்பதற்கான பிரசாரத்தில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்