டெல்லி, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் மானிய விலையில் தக்காளி விற்பனை - மத்திய அரசு நடவடிக்கை

தக்காளி கொள்முதலை அதிகரித்து மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2023-07-16 11:29 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துவரும் நிலையில், தக்காளி கொள்முதலை அதிகரித்து மானிய விலையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. தலைநகர் டெல்லி, நொய்டா உள்ளிட்ட சில நகரங்களில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் தலையீட்டால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி கிலோ ரூ.90 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், ஆரா உள்ளிட்ட பகுதிகளில் இன்றே மத்திய அரசின் சலுகை விலையில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்